Home திரையுலகம் “படையப்பா Title ரஜினியின் அதிரடி முடிவு!” ரசிகர்கள் ஷாக்

“படையப்பா Title ரஜினியின் அதிரடி முடிவு!” ரசிகர்கள் ஷாக்

தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக்காக திகழும் ‘படையப்பா’ திரைப்படத்துக்கு தலைப்பு வைத்தது நான்தான் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பகிர்ந்த தகவல் சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகியுள்ளது.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு வெளியான ‘படையப்பா’ படத்தின் ஆரம்பக் கட்டத்தில் பல பெயர்கள் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எனினும், அந்த பெயர்கள் கதைக்கான உணர்வையும், ரஜினிகாந்த் ஏற்றிருந்த பாத்திரத்தின் குணாதிசயத்தையும் பிரதிபலிக்கவில்லை என்று ரஜினிகாந்த் உணர்ந்தார்.

அந்த நிலையில், படத்துக்கு “படையப்பா” என்று தலைப்பு வைக்க ரஜினிகாந்த் நேரடியாக பரிந்துரைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பெயர், ரஜினிகாந்தின் தந்தை ராமசாமிக்கு வீட்டில் அன்பாக அழைக்கப்பட்ட புனைபெயர் என்பதும் அவர் கூறிய முக்கியமான தகவலாகும்.


“என் வாழ்க்கையில் முக்கியமான மனிதரின் பெயரை, என் வாழ்க்கையின் முக்கியமான திரைப்படத்திற்கு வைத்தேன்,” என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தலைப்பின் காரணமாகவே திரைப்படம் பெரும் உணர்ச்சி இணைப்பை உருவாக்கியதாகவும், தமிழ் சினிமாவில் மறக்க முடியாத படமாக திகழ்வதாகவும் குறிப்பிடப்படுகிறது.

டிசம்பர் 12ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இந்த நிலையில், ரஜினிகாந்தின் ஐம்பதாவது ஆண்டு திரையுலக பயணத்தை கொண்டாடும் வகையில் படையப்பா படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று படையப்பா படம் ரீ ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது