பிரபல நடிகர்கள் விஜய் தேவர கொண்டாவுக்கும் ரஷ்மிகா மந்தனாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான நூவிலா திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான நடிகர் விஜய் தேவர கொண்டா.
2017ஆம் ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் ஒரு ரக்கெட் பாயாக நடித்து உலக அளவில் ஃபேமஸ் நடிகரானார். பின்னர் 2018ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் திரைப்படத்தில் காதலியான நடிகை ரஷ்மிகாவுக்கு பயந்த ஒரு காதலனாக கலக்கி இருப்பார் நடிகர் விஜய் தேவரகொண்டா.
பின்னர் 2019 ஆம் ஆண்டு வெளியான டியர் காம்ரேட் திரைப்படத்தில் நடித்த பொழுது காதலில் விழுந்ததாக விஜய் மற்றும் ராஷ்மிகா பற்றிய கிசுகிசுக்கள் வெளியாகின. இதனை பற்றி பெரிதும் பேசாத இருவரும் தங்களது இன்ஸ்டா போஸ்டுகள் மூலமாக ரசிகர்களுக்கு அவ்வப்போது க்ளூ கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது ஹைதராபாில் உள்ள விஜய தேவரகொண்டா இல்லத்தில் வைத்து இருவரும் நிச்சதார்த்தம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில் இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொள்வர் என்று தகவல் கசிந்துள்ளது.








