Home திரையுலகம் “வடகிழக்கின் இசை நட்சத்திரம் அணைந்தது… ஜூபின் கார்க் மறைவுக்கு உலகமே இரங்கல்”

“வடகிழக்கின் இசை நட்சத்திரம் அணைந்தது… ஜூபின் கார்க் மறைவுக்கு உலகமே இரங்கல்”

வடகிழக்கு மாநிலங்களில் மிகவும் அதிகமான சம்பளம் பெரும் இசை கலைஞராக அறியப்பட்ட ஜூபின் கார்க் உயிரிழந்தது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிங்கப்பூரில்லிருந்து அசாம் மாநிலத்துக்கு கொண்டுவரப்பட்ட அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கானேர் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அசாம் மொழியில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் பாடகர் ஜூபின் கார்க். 30 ஆண்டுகளுக்கு மேலாக அசாம், வங்கம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பாடல்களை பாடியுள்ள இவர். இசையமைப்பாளராகவும் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

மணிரத்தினம் இயக்கத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் ஷாருக்கான் நடிப்பில் இந்தியில் வெளியான தில்சை திரைப்படத்தில் போக்கி போக்கி விடேக்கி பாடலை பாடி ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்த இவர் தமிழில் கலக்கல் படத்தில் வரும் இஞ்சி இடுப்பழகி பாடல் ரீமிக்ஸையும் பாடியுள்ளார்.

இந்த நிலையில் சிங்கப்பூரில் நடைபெற்று வரும் வடகிழக்கு இந்திய இசை திருவிழாவில் ஜூபின் கார்க் பங்கேற்க சென்றிருந்தார். நேற்றும் இன்றும் அவரது இசை நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில் ஸ்கூவா டைவிங் சென்றபோது விபத்தில் சிக்கினார்.

ஆழ்கடல் நீச்சலில் ஈடுபட்டிருந்தபோது மயங்கி விழுந்த அவரை மீட்டு அவசர முதலுதவி செய்து சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜூபின் கார்க் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

52 வயதில் காலமான பாடகர் ஜூபின் கார்க் மறைவுக்கு பிரதமர் மோடி மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் மற்றும் ஏஆர் ரகுமான் உள்ளிட்ட திறை பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

ஜூபின் கார்க் உயிரிழந்து இரண்டு நாட்களுக்கு பிறகு சிங்கப்பூரிலிருந்து அசாம் மாநிலம் குவஹாத்தி விமான நிலையத்துக்கு அவரது உடல் கொண்டுவரப்பட்டது.

அங்கிருந்து அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்ட ஜூபின் கார்க் உடலுக்கு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு பாடல் பாடி இறுதி அஞ்சலி செலுத்தினர். இதை தொடர்ந்து குவஹாத்தி உள்ள சாருசஜாய் மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பாடகர் ஜூபின் கார் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரசிகர்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.