அமெரிக்கா கனடாவுக்கு தபால் சேவை நிறுத்தப்படுவதாக இந்திய தபால் துறை அறிவித்திருக்கிறது. அமெரிக்கா இந்தியா இடையே வர்த்தக பிரச்சனை தொடர்பாக இரு நாட்டிற்கும் இடையேயான உறவு என்பது பாதிக்கப்பட்டிருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில் அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50 விழுக்காடு வரி விதித்திருக்கக்கூடிய ஒரு சூழலில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு வகையாக இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு கடிதங்கள் மற்றும் பொருட்களை தபால்துறை மூலமாக அனுப்புகின்ற சேவை என்பது நிறுத்தப்பட்டிருப்பதாக தபால்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
சென்னையில் இருக்கக்கூடிய முக்கியமான தபால் நிலையங்களில் இது தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால் இது தெரியாமல் பல்வேறு பொதுமக்கள் அமெரிக்காவிற்கு கடிதங்கள் மற்றும் பொருட்களை அனுப்புவதற்காக வந்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
தற்காலிகமாக இது போன்ற ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்றும் மத்திய அரசு மீண்டும் எப்போது உத்தரவு வழங்குகிறதோ அப்போது இருந்து மீண்டும் சேவை தொடங்கும் என்றும் அஞ்சல்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும் இன்று முதல் கனடாவுக்கான சேவையும் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. கனடாவில் அஞ்சல்துறை அங்கே இருக்கக்கூடிய ஊழியர்கள் எல்லாம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதன் காரணமாக கனடாவிற்கான சேவையும் இன்று முதல் நிறுத்தப்படுவதாகவும் அஞ்சல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரியவில்லை. ஆனால் இப்போதைக்கு சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருப்பதாக தபால்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.








