Home விளையாட்டு “ஐபிஎல் 19: புதிய நடைமுறைகள் மூன்று வீரர்களை நீக்கியது”

“ஐபிஎல் 19: புதிய நடைமுறைகள் மூன்று வீரர்களை நீக்கியது”

ஐபிஎல் தொடரின் புதிய விதிமுறைகள் காரணமாக மூன்று நட்சத்திர வீரர்கள் 19வது தொடரில் விளையாட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க வெளிநாட்டு வீரர்கள் கட்டாயம் தங்களது பெயர்களை பதிவு செய்ய வேண்டும். ஒருவேளை பெயர் பதிவு செய்யவில்லை என்றால் அடுத்த சீசனுக்கான ஏலத்திலும் பங்கேற்க முடியாது.

மேலும், காயம் காரணமாக விளையாட முடியாத சூழ்நிலை இருந்தால், அதை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். அதேபோல, ஒரு அணியால் வாங்கப்பட்ட பிறகு தனிப்பட்ட காரணத்தை கூறி தொடரிலிருந்து விலகக்கூடாது. காயம் ஏற்பட்டிருந்தாலும், சம்பந்தப்பட்ட அணியின் மருத்துவக் குழு உறுதி செய்தால் மட்டுமே முறைப்படி அணியை விட்டு விலக முடியும்.

இவ்வாறு இல்லாமல், தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினால், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அந்த வீரர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாது. இந்த இரண்டு விதிமுறைகளின் காரணமாக, நடப்பு ஐபிஎல் தொடரில் இங்கிலாந்து வீரர்களான பென் ஸ்டோக்ஸ், ஹாரி ப்ரூக் மற்றும் ஜேசன் ராய் ஆகிய மூவரும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.