Home விளையாட்டு “ஜடேஜா பிறகு தான் சாம்சன்! வரவேற்பு லேட் ஆனது ஏன்? – சிஎஸ்கே விளக்கம் வைரல்!”

“ஜடேஜா பிறகு தான் சாம்சன்! வரவேற்பு லேட் ஆனது ஏன்? – சிஎஸ்கே விளக்கம் வைரல்!”

சஞ்சு சாம்சன் ட்ரேடிங் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு வந்திருந்தாலும், கிரிக்கெட் ரசிகர்கள் சென்னை அணியை சமூக வலைத்தளங்களில் அடித்து துவைத்து வருகின்றனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனும் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான சஞ்சு சாம்சன் தொடர்பான ட்ரேடிங் விவகாரமே கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் வட்டாரங்களில் ‘ஹாட் டாபிக்’ ஆக இருந்தது.

இறுதியாக, சஞ்சு சாம்சன் சென்னை அணியில் இணைந்துவிட்டார். அதேசமயம் சிஎஸ்கேவின் “தளபதி” ஜடேஜாவும், தனது ஐபிஎல் பயணத்தைத் தொடங்கிய ராஜஸ்தான் அணியிலேயே மீண்டும் இணைந்துள்ளார்.

ராஜஸ்தான் அணி ஜடேஜாவை உற்சாகமாக வரவேற்ற நிலையில், சஞ்சு சாம்சனுக்கு அப்படியான ஒரு சிறப்பு வீடியோவோ அல்லது பதிவு ஒன்றோ சென்னை அணி வெளியிடவில்லை. இதைப் பார்த்த சென்னை ரசிகர்கள், “ஜடேஜாவுடன் சேர்ந்து அட்மினையும் ராஜஸ்தானுக்கு தாரைவார்த்துட்டீங்களா?” என்று சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்தனர்.

இதற்கு பதிலாக, சென்னை அணி “முதலில் ஜடேஜாவுக்கு பிரியாவிடை வீடியோ; அதன் பிறகு தான் சஞ்சுவுக்கு வரவேற்பு வீடியோ” என்று விளக்கம் அளித்தது. அதன்படி, தற்போது சஞ்சு சாம்சனுக்கான ஒரு சிறப்பான வரவேற்பு வீடியோவை சிஎஸ்கே சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது. சஞ்சு சாம்சனின் சென்னை என்ட்ரியை மிக அழகாக காட்சிப்படுத்தியுள்ளனர்.