கிரிக்கெட்டை விட நான் வேறெதையும் அதிகமாக நேசிப்பதில்லை என்று இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.
ஸ்மிருத்தி மந்தனா மற்றும் இசையமைப்பாளர் பலாஷ் முச்சலின் திருமணம் நடைபெற இருந்த நிலையில், அது ரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்து, நாட்டுக்காக கிரிக்கெட் விளையாடுவதிலேயே கவனம் செலுத்தப் போவதாக ஸ்மிருத்தி மந்தனா தெரிவித்துள்ளார்.
அவர் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடும் புகைப்படமும் வெளியாகி வைரலாகியுள்ளது. இலங்கை அணியுடனான மகளிர் டி20 கிரிக்கெட் தொடருக்காக தயாராகி வரும் ஸ்மிருத்தி மந்தனா, “கிரிக்கெட்டை விட நான் வேறெதையும் அதிகம் நேசிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
இந்திய அணியின் ஜெர்சியை அணிவதே தனக்கு உத்வேகத்தை அளிப்பதாகவும், இது தன் அனைத்து பிரச்சனைகளையும் மறந்து வாழ்க்கையில் கவனம் செலுத்த உதவுவதாகவும் ஸ்மிருத்தி மந்தனா தெரிவித்துள்ளார்.








