Home திரையுலகம் “ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ஒத்திவைப்பு – காரணம் அவரது தந்தை!”

“ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ஒத்திவைப்பு – காரணம் அவரது தந்தை!”

கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தானா மற்றும் இசையமைப்பாளர்-பிலிம் மேக்கர் பலாஷ் முச்சல் ஆகியோரின் திருமணம் இன்று மாலை நடைபெற இருந்தது.

ஆனால், ஸ்மிருதி மந்தானாவின் தந்தைக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, திருமண தேதி குறிப்பிடாமல் நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்மிருதி மந்தானாவின் மேலாளர் பிகின் மிஷ்ரா இந்த தகவலை உறுதி செய்துள்ளார். அவருடைய தந்தைக்கு இன்று காலை உணவருந்தும் போது மாரடைப்பு ஏற்பட்டதால் அனைத்து நிகழ்வுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், அடுத்த கட்டமாக தேதி குறிப்பிடாமல் அந்த நிகழ்வுகள் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.