Home விளையாட்டு “திருமணம் நின்றுவிட்ட ஸ்மிருதிக்கு ஆதரவாக ஜெமிமா எடுத்த அதிரடி முடிவு!”

“திருமணம் நின்றுவிட்ட ஸ்மிருதிக்கு ஆதரவாக ஜெமிமா எடுத்த அதிரடி முடிவு!”

கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ், தனது சகதோழி மற்றும் வீராங்கனையான ஸ்மிருதி மந்தனாவுக்காக எடுத்துள்ள முடிவு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் இசையமைப்பாளர் பல்லாஷ் முச்சல் இருவரின் திருமணம் நவம்பர் 23-ஆம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் திருமணம் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன.

இதற்கு மந்தனாவின் தந்தை சீனிவாசனின் உடல்நலக் குறைவே காரணம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் பல்லாஷ் செய்த துரோகத்தை ஸ்மிருதி கண்டுபிடித்ததால்தான் திருமணம் நின்றுவிட்டதாகவும் இன்னொரு தகவல் பரவி வருகிறது.

இது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதே சமயம், இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ், மந்தனாவுக்கு இந்த நேரத்தில் ஆறுதலாக இருப்பதற்காக WBBL கிரிக்கெட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இதை பிரிஸ்பேன் ஹீட் அணி ஒரு அறிக்கையால் உறுதி செய்துள்ளது. அதில், ரோட்ரிக்ஸ் தனது தோழிக்காக இந்தியாவில் தங்கி ஆதரவளிக்க விரும்புவதால், WBBL சீசனின் மீதமுள்ள நான்கு போட்டிகளில் அவர் பங்கேற்காமல் இருப்பதற்கு அணி ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை பார்த்த நெட்டிசன்கள், “தோழிக்காக ஜெமிமா எடுத்த இந்த முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது. இப்படிப்பட்ட ஒரு தோழி கிடைப்பது ஒரு வரம் தான்” என பல்வேறு முறையில் பாராட்டி வருகின்றனர்.