தேசிய டேக் வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற தமிழக மாணவிக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஒடிசாவில் உள்ள ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான டேக் வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த வர்ஷா சுரேஷ் என்ற 11 வயது மாணவி கலந்து கொண்டார். இவர் சப் ஜூனியர் பிரிவில் கலந்து கொண்ட டெல்லி மாணவியிடம் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
வெண்கல பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய மாணவி வர்ஷாவுக்கு சென்னை விமான நிலையத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.








