Home தமிழகம் “₹10 டிபன், ₹15 சாப்பாடு: மதுரையில் மக்கள் மனம் நிறைந்த சேவை!”

“₹10 டிபன், ₹15 சாப்பாடு: மதுரையில் மக்கள் மனம் நிறைந்த சேவை!”

மதுரையில் ₹10க்கு காலை உணவு ₹15 ரூபாய்க்கு மதிய உணவு என ஏழை மக்களின் பசியை ஆற்றி வருகின்றனர் ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் குடும்பத்தினர். தரமான உணவை குறைவான விலைக்கு கொடுப்பதால் வயிறு நிறைந்து மனமும் நிறைந்து வாழ்த்தி செல்கின்றனர் மக்கள்.

“மதுரை பிபி.குளம் உழவர் சந்தையில் அசத்தல் சேவை! அக்ஷதா உதயகுமார் மற்றும் உதயகுமார் தம்பதிகள் தங்கள் வல்லமை அறக்கட்டளை மூலம் ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் சத்தான உணவு வழங்கி வருகிறார்கள்.

காலை உணவு ₹10க்கு, மதிய உணவு ₹15க்கு கிடைக்கிறது. இந்த சேவையின் மூலம், பொதுமக்கள் வயிறு நிறைந்து மனமும் நிறைந்து மகிழ்வடைகிறார்கள். இன்று காலை 250க்கும் மேற்பட்டோர் இந்த சிறந்த சேவையால் பயனடைந்துள்ளனர்.

உணவின் மெனு தினசரி மாறுகிறது: காலை பொங்கல், சேமியா, கிச்சடி, உளுந்து வடை; மதியம் தக்காளி வெஜ் பிரியாணி, முட்டை சேர்த்து வழங்கப்படுகிறது. சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் நியாயமான வரிசையில் உணவு பெறுகின்றனர்.

உழைக்கும் மக்களுக்கு விலை குறைவான சத்தான உணவை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என மக்கள் தெரிவித்துள்ளனர். “ஒரு ₹10 கொடுத்து நல்ல உணவு சாப்பிடலாம், மிகவும் உதவியாக இருக்கிறது,” என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர்.

அக்ஷதா உதயகுமார் தங்கள் மகனும் மருமகள் ரம்யா பாரதியும் ஊக்கமளித்ததால் இந்த சேவை வெற்றியாக செயல்படுகிறது எனவும் கூறினார். இந்த அற்புத முயற்சி மதுரை மக்களின் வாழ்வில் உணவின் முக்கியத்துவத்தை மீண்டும் விளக்குகிறது.”