முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் 1,156 கிராம சுகாதார செவிலியர் மற்றும் 75 துணை செவிலியர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி வருகிறார்.
மிக நீண்ட கால சட்டப் போராட்டங்களுக்கு பிறகு உச்சநீதிமன்றத்தின் நீண்ட நெடிய படிகட்டுகளை ஏறி இறங்கி, மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவருடைய அறிவுறுத்தலுக்கு, ஏற்ப உச்சநீதிமன்றத்தின் மிகச் சிறந்த மூத்த வழக்கறிஞர்கள் இன்றைக்கு இதற்காக நியமிக்கப்பட்டு இதில் வெற்றியும் கண்டு, 1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு நம்முடைய மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் இன்றைக்கு பணியாணைகளை தந்திருக்கிறார்கள்.
தமிழகம் முழுவதும் அரசு சுகாதார நிலையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அதே நேரத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளால் காலிப்பணி இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டு வந்தது
அந்த வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களில் 1,156 கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் 75 துறை செவிலியார்களுக்கான பணியிடங்கள் நேரடி நியமனம் மூலமாக தேர்வு செய்யப்பட்டிருந்தார்கள்
இவர்களுக்கான பணி நியமன ஆணைகளை தமிழக முதலமைச்சர் தற்போது வழங்கி வருகிறார் இது தொடர்பான வழக்கு என்பது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது இவர்களுக்கு இதன் அடிப்படையில் கிராம சுகாதார செவியர் பணிகள் நிரப்பப்படுகிறது அதனை எதிர்த்து பல்வேறு விதமான சட்ட போராட்டங்கள் நடைபெற்றது
அந்த வகையில் அதற்கான தீர்ப்பும் சாதகமாக கிடைக்கப்பட்ட அடிப்படையில் 1,231 கிராம சுகாதார ஊழியர்கள் மற்றும் 75 துணை தொழில் பணியினர்கள் நேரடியான நியமன மூலமாக தெரிவு செய்யப்பட்டு அதற்கான பணி நியமன ஆணைகளை தமிழக முதலமைச்சர் தற்போது வழங்கி வருகிறார்.








