Home தமிழகம் “பிட்புல், ராட்வீலர் நாய் உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு”

“பிட்புல், ராட்வீலர் நாய் உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு”

சென்னை மாநகராட்சியில் ஒரு முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது செல்லப் பிராணிகளை வளர்ப்போரின் கவனத்திற்கு உரிய அறிவிப்பாகும்.

நாளை முதல், பிட்புல் மற்றும் ராட்வீலர் நாய் இனங்களை வாங்கி வளர்ப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பிட்புல் மற்றும் ராட்வீலர் நாய் இனங்கள் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை எனக் கூறி, அவை தொடர்பாக ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், நாளை முதல் பிட்புல் அல்லது ராட்வீலர் இன நாய்களை வாங்கி வளர்ப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட நாய் இனங்களை வளர்க்கக் கூடாது என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளார். இதற்கான தீர்மானம் சென்னை மாமன்ற கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

செல்லப் பிராணிகளை வளர்ப்போரின் கவனத்திற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவிலேயே நாய்க்கடி சம்பவங்கள் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள சூழலில், இந்த கட்டுப்பாடு தற்போது சென்னையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட நாய் இனங்களை வளர்க்கக் கூடாது என ஏற்கனவே பல்வேறு தளங்களில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சென்னை மாநகராட்சி கூட்டத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் படி, நாளை முதல் பிட்புல் அல்லது ராட்வீலர் இன நாய்களை வாங்கி வளர்ப்போருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.