முதலாவதாக, அனைத்தையும் விட்டு விட்டு வந்துள்ள என்னை மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள் என்று அவர் தெரிவித்தார்.
இரண்டாவதாக, வள்ளுவர் கூட்டத்திற்கு காட்டும் அக்கறையை மக்களின் வாழ்வாதாரத்திற்கு காட்டுவதில்லை என்று கூறி, ஆளும் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.
மூன்றாவதாக, இங்கு அரசு நிர்வாகம் நடைபெறுகிறதா அல்லது கண்காட்சி நடத்தப்படுகிறதா என்ற கேள்வியை விஜய் தனது இன்றைய உரையில் எழுப்பினார்.
நான்காவதாக, “உங்களுக்கு கொள்ளையடித்து வைத்துள்ள பணம்தான் துணை. எனக்கு என்மீது அன்பு வைத்துள்ள மக்கள் மட்டுமே துணை” என்ற கருத்தை அவர் முன்வைத்தார்.
ஐந்தாவதாக, தந்தை பெரியாரின் பெயரை கூறி கொள்ளையடிப்பவர்கள் தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் மற்றும் கொள்கை எதிரிகள் என திட்டவட்டமாக அறிவித்தார்.
ஆறாவதாக, தமிழக வெற்றி கழகத்தை எவ்வாறு முடக்கலாம் என்பதே 24 மணி நேரமும் அவர்களின் யோசனையாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டை அவர் முன்வைத்தார்.
ஏழாவதாக, பவானி, அமராவதி மற்றும் நொய்யலாறு இணைப்பு திட்டம் குறித்து, “ஒரு திரும்புகூட அசைக்கப்படவில்லை” எனும் மிக முக்கிய குற்றச்சாட்டை விஜய் வைத்தார்.
எட்டாவதாக, மக்கள் பணத்தை கொண்டு மக்களுக்கே செய்வது இலவசம் கிடையாது என்றும் அவர் புதிய விமர்சனக் கருத்தை முன்வைத்தார்.
ஒன்பதாவதாக, மக்கள் பிரச்சினைகளுக்காக எப்போதும் குரல் கொடுப்பேன்; நான் மக்களின் பக்கம், மக்கள் என் பக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பத்தாவதாக, தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்தால் சட்டம் முன் சமரசம் இருக்காது என்று திட்டவட்டமாக அறிவித்தார்.
பதினொன்றாவதாக, “எம்ஜிஆர், ஜெயலலிதா சொன்னதை நானும் சொல்கிறேன். திமுக என்பது ஒரு தீய சக்தி” என்ற கருத்தை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
பன்னிரண்டாவதாக, தீய சக்தியான திமுகவுக்கும், தூய சக்தியான த.வெ.க .வுக்கும் இடையேதான் போட்டி என்றும் விஜய் உறுதியாக கூறினார்.
பதிமூன்றாவதாக, “நான் பேசினால் சினிமா வசனம்; நீங்கள் பேசினால் சிலப்பதிகார வசனமா? கேரக்டரையே புரிந்துகொள்ள மாட்டீர்களா?” என்ற முதலமைச்சரின் பேச்சை விமர்சித்து அவர் கேள்வி எழுப்பினார்.
பதினான்காவதாக, விவசாயிகள் லஞ்சம் கொடுத்தாலும் நெல் கொள்முதல் நடவடிக்கைகளில் கொள்ளை நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்தார்.
பதினைந்தாவதாக, “எதிரிகள் யார் என்பதை சொல்லிவிட்டே நாங்கள் களத்திற்கு வந்துள்ளோம். அவர்களையே எதிர்ப்போம்; களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க மாட்டோம்” என்று விஜய் இன்றைய விஜயமங்களம் மாநாட்டில் உரையாற்றும்போது தெரிவித்தார்.








