Home தமிழகம் ஆம்பூர் கலவர வழக்கு தீர்ப்பு இன்று: மாவட்டம் முழுவதும் கடும் பாதுகாப்பு

ஆம்பூர் கலவர வழக்கு தீர்ப்பு இன்று: மாவட்டம் முழுவதும் கடும் பாதுகாப்பு

2015 ஆம்பூர் கலவர வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் மக்கள் கூடும் இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

2015 ஆம் ஆண்டு தென்னுருவர் காணாமல் போன வழக்கில் ஆம்பூர் பகுதியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக இன்று திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாக இருக்கிறது.

நீதிமன்ற தலைவர் இன்று தீர்ப்பு வழங்கி இருக்கக்கூடிய நிலையில் ஆம்பூர் பகுதியில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில் வாகனம் தலைமையிலான 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் ஆன பேருந்து நிலையம் ரயில்வே நிலையம் உள்ளிட்ட இடங்களிலும், வழிபாட்டு தளங்களான மசூதி, கோவில்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் காவல் துறையினர் ஆங்காங்கே பிரித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எந்தவிதமான அசபாவிதமும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனம் தலைமையிலான காவல் துறையினரும் ,திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீமலாதேவி ஆகியோர் தலைமையில் மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.