திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லை வாயிலில் உள்ள ஜூஸ் கடையில் அழுகிய பழங்கள் மற்றும் எலி கடித்த பழங்களை பயன்படுத்தி கடை ஊழியர் ஜூஸ் போட்டு தருவதாக கூறி வாடிக்கையாளர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஆவடி மாநகராட்சி சிடிச் சாலை திருமுல்லைவாயில் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் ஜூஸ் கடை ஒன்றில் வாடிக்கையளர் அவர்கள் ஜூஸ் குடிக்க சென்றிருந்தபோது ஜூஸ் போடுவதற்காக மாதுளை பழத்தை எடுத்தபோது எலி கடித்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக கடையில் அவர் பார்வையிட்டபோது பல்வேறு பழங்கள் எலி கடித்திருப்பது அழிகிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து போனார் இது குறித்து வீடியோ காட்சிகள் தனது செல்போனில் பதிவு செய்ததோடு கடைக்காரரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார் .
அலட்சியமாக சுகாதாரம் அற்ற முறையில் ஜூஸ் போட்டு வாடிக்காளர்களுக்கு வினியோகித்து வரும் பிரபல ஜூஸ் கடை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு கோரிக்கையை விடுத்துள்ளனர்.
மேலும் ஆவடி மாநகராட்சியில் பல்வேறு ஜூஸ் கடைகள், சிற்றுண்டிகள், உணவகங்கள், உரிய உணவு பாதுகாப்பு உரிமம் பயிற்சியின்றி செயல்பட்டு வருவதை அதிகாரிகள் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.








