Home தமிழகம் “ஒரு குவார்ட்டர் வாங்கினால் நான்கு இட்லி கறிக்குழம்பு – திருவொற்றியூரில் பரபரப்பு”

“ஒரு குவார்ட்டர் வாங்கினால் நான்கு இட்லி கறிக்குழம்பு – திருவொற்றியூரில் பரபரப்பு”

சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பாரில், அதிகாலை முதலே கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. 250 ரூபாய்க்கு மது வாங்கினால், இலவசமாக நான்கு இட்லி, கறிக்குழம்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதால், மது பிரியர்கள் அதிக அளவில் அங்கு செல்வதாக கூறப்படுகிறது.

காலை முதலே கள்ளச்சந்தையில் மது விற்பனை திருவொற்றியூர் பகுதியில் ஜோராக நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, இந்த பாரில் 250 ரூபாய் கொடுத்து மது வாங்கினால், நான்கு இட்லி மற்றும் கறிக்குழம்பு இலவசமாக, எந்த கட்டணமும் இன்றி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

வடசென்னை திருவொற்றியூர் பகுதிக்குட்பட்ட எல்லைம்மன் கோவில் பீச் சாலையில் (Beach Road) இந்த தனியார் பார் இயங்கி வருகிறது. இந்த பாரில் அதிகாலை முதலே மது பிரியர்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்வதாக கூறப்படுகிறது.

250 ரூபாய்க்கு குவார்ட்டர் வாங்கினால், மாங்காய் உள்ளிட்ட சைடு டிஷ்களும், நான்கு இட்லி, கறிக்குழம்பு போன்ற மெயின் டிஷ்களும் இலவசமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சலுகைகளை எதிர்பார்த்து, ஏராளமான மது பிரியர்கள் இந்த பாருக்கு வந்து செல்வதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், திருவொற்றியூர் காவல் நிலையத்திலிருந்து வெறும் ஒரு கிலோமீட்டர் தொலைவிலேயே இந்த பார் அமைந்திருந்தும், போலீசார் இதனை கண்டுகொள்ளாமல் இருப்பது பொதுமக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த பார் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு அரசியல் பிரமுகருக்கு சொந்தமானது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.