Home தமிழகம் “சங்கராபுரம் காவல் நிலையம் முற்றுகை – திருநங்கைகளின் போராட்டம் பரபரப்பு”

“சங்கராபுரம் காவல் நிலையம் முற்றுகை – திருநங்கைகளின் போராட்டம் பரபரப்பு”

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு திருநங்கைகள் போராட்டமானது நடத்தி வருகின்றன வீட்டுமனை தொடர்பான பிரச்சனையில் திருநங்கையை தாக்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு திருநங்கைகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ஊராங்கணி கிராமத்தை சேர்ந்த தொப்பளான் மகன் வேலு மற்றும் அவரது தம்பி காசிநாதன் ஆகிய இருவருக்கும் வீட்டுமனை பாகப்பிரிவு தொடர்பான பிரச்சனை தொடர்ந்து இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு வேலு மற்றும் அவருடைய மகன்களான முரளி, சுமன் ஆகியவர்கள் சேர்ந்து அதே கிராமத்தில் வசித்தவரும் அவரது தம்பி காசிநாதன் மனைவி சத்தியா திருநங்கை தங்கையான ஜெயா ஆகியவர்களை அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தாக்குல் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து சங்கராபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் தாக்குதல் நடத்தியவரை கைது செய்ய கூறி சங்கராபுரம் காவல் நிலையம் முன்பு திருநங்கைகள் முற்றுகையீட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது