Home தமிழகம் ” தொடர் சாரல் மழை ” சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

” தொடர் சாரல் மழை ” சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

தென்காசி மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாகவே சாரல் மழையானது பெய்து வருகிறது. இந்த தொடர் சாரல் மலையின் காரணமாக குற்றாலத்தின் மேற்கு தொடர்ச்சி பகுதியில் அமைந்துள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி, புளியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்தானது அதிகமாக கொட்டிவருகிறது.

மேலும் அந்த வகையில் தொடர்ந்து வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறையின் காரணமாக குற்றாலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகளும் குவிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தொடர் சாரல் மழையின் காரணமாக தண்ணீரானது அதிகமாக கொட்டி வரக்கூடிய நிலையில் மெயினருவி மற்றும் பழைய குற்றால அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடையானது இருந்து வருகிறது.

நேற்று இரவு முதல் இந்த தடையானது நீடிக்கப்பட்ட நிலையில் இன்று இரண்டாவது நாளாக மெயின் அருவியிலும் மூன்றாவது நாளாக பழைய குற்றாலஅருவியிலும் இந்த தடையானது நீட்டிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் ஏராளமான சுற்றலா பயணிகள் வருகையை கருத்தில் கொண்டு சிற்றருவி, புலியருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளை சுற்றலா பணிகள் குளிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த மெய்அருவி மற்றும் பழைய குற்றால அருவியில் குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ஐந்தருவியில் சுற்றலா கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.

இதன் காரணமாக அங்கு காவல் துறையினர் பாதுகாப்பு பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மாவட்டத்தை பொறுத்தவரை தொடர் சாரல் மழையுடன் ஒரு விதமான சூழல் நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.