தீபாவளி சிறப்பு ரயில்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம் தொடர்பாக தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
சென்னையிலிருந்து தென்மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 26 ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் நாகர்கோவில் தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
செப்டம்பர் 29 முதல் அக்டோபர் மாதம் திங்கள்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு ரயில் சேவை இயக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
ஆயுத பூஜை மற்றும் தீபாவளி விடுமுறையை முன்னிட்டு செப்டம்பர் இறுதி வாரத்திலிருந்து அக்டோபர் இறுதி வாரம் வரை அதாவது ஒரு மாத காலத்திற்கு அனைத்து பகுதிகள் சென்னையிலிருந்து தென்மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களை இணைப்பதற்காக ஆறு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.
குறிப்பாக தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கான சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை ஆகிய தேதிகளில் செல்லும் மார்க்கம் மற்றும் வருமார்க்கமாக பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோன்று சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூர் கோத்தனூருக்கான சிறப்பு ரயிலும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வியாழக்கிழமை இரவு 11.50க்கு சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் புறப்படும் என்றும், போத்தனூரில்லிருந்து வெள்ளிக்கிழமை புறப்படும் என்றும், தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை சென்ட்ரலில் இருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சிறப்பு ரயில் காட்பாடி மற்றும் சேலம் வழியாக மதுரையை நோக்கி செங்கோட்டையை அடையும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு புதன்கிழமை அன்றும் இந்த ரயில் சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முக்கியமாக திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தூத்துக்குடியிலிருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் நாகர்கோவிலுக்கான சிறப்பு ரயில் இன்னொரு சிறப்பு ரயிலும் அறிவிச்சிருக்காங்க. அது மதுரை, திண்டுக்கல், சேலம், காட்பாடி வழியாக சென்னை சென்ட்ரலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆறு சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8.00மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டிருக்கிறது. கூட்ட நெரிசலை
கட்டுப்படுத்துவதற்காக இந்த சிறப்பு ரயில்களை பயணிகளை பயன்படுத்தி கொள்ளலாம் என கூறப்படுகிறது.
ஒவ்வொரு ரயிலிலும் குறைந்தபட்சம் 1200 இருக்கைகள் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது நாளையில்இருந்தே இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது








