Home தமிழகம் இரவில் ஓடிய ஆம்னி… நேர்மையை வெளிச்சம் போட்ட 2 லட்சம் ரூபாய்!

இரவில் ஓடிய ஆம்னி… நேர்மையை வெளிச்சம் போட்ட 2 லட்சம் ரூபாய்!

ஆம்னி பேருந்தில் பயணி தவறவிட்ட 2 லட்சம் ரூபாயை ஓட்டுநர்கள் அரந்தாங்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பெங்களூரிலிருந்து நேற்றிரவு புதுக்கோட்டை மாவட்டம் அரந்தாங்கிக்கு ஒரு தனியார் ஆம்னி பேருந்து வந்தது.

பேராவூரினையை சேர்ந்த ரேவதி என்பவர் பேருந்தில் கிருஷ்ணகிரியில் ஏறியிருந்தார். அவர் இரண்டு லட்சம் ரூபாய் வைத்திருந்த பர்ஸை ஆம்னி பேருந்தில் வைத்துவிட்டு இறங்கிச் சென்றுவிட்டார்.

பயணிகள் அனைவரும் அரந்தாங்கியில் இறங்கிய பின்னர், ஓட்டுநர்கள் சீட்டை சுத்தம் செய்தபோது இரண்டு லட்சம் ரூபாய் இருந்த பர்ஸை கண்டெடுத்தனர். அவர்கள் நேர்மையாக டிராவல் ஏஜெண்டின் உதவியுடன் அந்தப் பர்ஸை அரந்தாங்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து பணத்தை இழந்த ரேவதி அரந்தாங்கி காவல் நிலையத்திற்கு வந்தார். அவரிடம் பணத்தை ஒப்படைத்ததுடன், இரண்டு லட்சம் ரூபாயை கண்டுபிடித்து ஒப்படைத்த ஓட்டுநருக்கு காவல்துறை சார்பில் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது