Home தமிழகம் “இலவசம் கண்ணா… மாமல்லபுரம் முழுக்க FREE பார்வை

“இலவசம் கண்ணா… மாமல்லபுரம் முழுக்க FREE பார்வை

மாமல்லபுரத்தில் உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு, பல்லவ மன்னர்களின் கலைச் சிற்பங்களை இன்று திருவிழா கட்டணமின்றி இலவசமாக கண்டு ரசிக்கலாம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

ஆண்டுதோறும் நவம்பர் 19 முதல் 25ஆம் தேதி வரை உலக பாரம்பரிய வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதின் முதல் நாளான இன்று, மாமல்லபுரத்தில் தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு, கிருஷ்ண மண்டபம் மற்றும் வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட குகைவரைச் சிற்ப வளாகங்களில், சுற்றுலா பயணிகள் கட்டணம் இன்றி இலவசமாக கண்டு ரசிக்கலாம் என்று தொல்லியல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.