Home தமிழகம் “தியாகராய நகர் கெமிக்கல் நிறுவனம் மீது ஐடி ரெய்டு – பல இடங்களில் ஒரே நேரத்தில்...

“தியாகராய நகர் கெமிக்கல் நிறுவனம் மீது ஐடி ரெய்டு – பல இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை”

சென்னை தியாகராய நகரில் உள்ள வடக்கு கிரசன்ட் ரோட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் தற்போது சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

குறிப்பாக அவர்கள் ஆர்கரியன் கெமிக்கல் இண்டஸ்ட்ரி லிமிடட் என்கின்ற நிறுவனமானது கடல்சார் தொழில் தொடர்பான மெட்டீரியல்களை தயாரித்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்து வருகிறது.

இந்த நிறுவனத்தில் வரியைப்பு நடந்ததாக வந்த புகாரின் அடிப்படையில் சென்னை முழுவதும் சோதனை நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக தியாகராய நகர் கெமிக்கல் நிறுவனத்தில் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.

குறிப்பாக கடல்சார் தொடர்பான மெட்டீரியல்களை உற்பத்தி செய்து இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்து வரும் இந்நிறுவனம் வருடத்திற்கு சுமார் 4,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறது என்று இந்நிறுவனத்தின் வரியைப்பு நடந்ததாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை முழுவதும் சோதனை நடத்தி வருகிறார்கள்.

சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் புறநகரங்களிலும் மேலும் குஜராத்திலும் ஒரே நேரத்தில் சோதனையானது நடைபெற்று வருகிறது.

அதன்படி வடபழனி காவல் நிலையம் எதிரே உள்ள அப்பாசாமி அடுக்குமாடி குடியிருப்பு அதேபோல ஆழ்வார்பேட்டை மெட்ரியன் பில்டர்ஸ் குடியிருப்பு தொடர்ந்து எம்ஆர்சி நகரில் உள்ள டிவிஎஸ் பெலிசியன் டவர் என தொழில்திபர்கள் வசிக்கும் வீடு உட்பட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

குறிப்பாக இண்டஸ்ட்ரியல் சால்ட் ரோமான்ஸ் சோடியம் பாஸ்பேட் போன்ற தொழில் துறைக்கு தேவையான முக்கிய கெமிக்கல்களை தயாரிக்கும் இந்த நிறுவனம் மீது வருமானவரித்துறை அதிகாரிகள் தற்போது சோதனை மேற்கொண்டு வருகிறார்கள் .

குறிப்பாக தற்போது நடைபெற்று வரும் இந்த வருமான வரித்துறையின் சோதனையானது சோதனையின் இறுதி கட்டத்தில் கைப்பற்றப்படும் ஆவணங்கள் மற்றும் பணங்கள் இவைகளை வைத்து பின்பு என்ன மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரியவரும் .