மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மற்றும் வானகிரி கிராம மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மீனவர்களுக்கு ஆதரவாக வணிகர்களும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மற்றும் வானகிரி கிராம மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்துகிறார்கள்.
மயிலாடுதுறை மாவட்டத்தை பொறுத்தவரைக்கும் 28 மீனவர் கிராமங்கள் அமைந்துள்ளது. தற்போது தரங்கம்பாடியில் இந்த கருப்புக்கொடி ஆர்ப்பாட்டமானது நடைபெற்று வருகிறது.
மாவட்ட தலைமை கிரமமான தரங்கம்பாடி மற்றும் வானகிரி பகுதியில் உள்ள மீனவர்கள் அந்த பகுதியில் கடலில் இறங்கி தங்களது படகுகளில் கருப்பு கொடி ஏந்தி வளம் வந்த நிலையில் மீனவபெண்கள் மற்றும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கடலில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தை ஈடுபட்டுருந்தனர்.
முக்கியமா இவர்களோட பிரதான கோரிக்கை அரசால் தடை செய்யப்பட்ட வலைகள் அதாவது சுருக்குமடி வலை இரட்டும்படி வலை உள்ளிட்ட வலைகளை தடை செய்யணும்.
அந்த வலைகளை மீறி பயன்படுத்தும் மீனவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கணும். அதேபோல அதிவேக விசைப்படகுகள் பயன்படுத்தி மீன்பிடிக்கிறத உடனடியா தடை செய்யணும்.
மீன்பிடி ஒழுங்கு முறை சட்டத்தை முறையாக அமல்படுத்தணும் அப்படின்ற கோரிக்கையை வலியுறுத்தி தான் இந்த போராட்டம் நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது.
சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்த இரண்டு மீனவர் கிராமங்களுக்கு ஆதரவு கொடுத்து சீர்காழி அருகே வானகிரி பகுதியிலயும் தரங்கம்பாடி கடற்கரை பகுதியிலும் இந்த ஆர்ப்பாட்டம் கடலில் இறங்கி நடைபெற்று வந்தது.
தற்போது தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் நாகை சென்னை தேசிய நெடுஞ்சாலை இந்த தரங்கம்பாடி கடை வீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துட்டு இருக்காங்க.
அதேபோல இந்த மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிச்சு தரங்கம்பாடி பகுதியில் சுமா நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை அடித்து வணிகர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
தொடர்ந்து இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருவதால் இந்த நாகை சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முழுவதுமாக பாதிக்கப்பட்டிருக்கு.
போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினாலும் மீன்வலை துறைத்து அதிகாரிகள் தங்களிடம் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். உரிய எழுத்துப்பூர்வமான உறுதி அளித்தால் மட்டுமே தங்களது போராட்டத்தை கைவிடுவோம் என்று வலியுறுத்தி மீனவர்கள் தொடர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துட்டு இருக்காங்க








