வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் கடத்தப்பட்டிருந்த 4 வயது சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுவனின் தந்தையின் முகத்தில் மர்ம கும்பல் மிளகாய் தூள் வீசி தாக்கியது. அதன் பின்னர் சிறுவனை கடத்திச் சென்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
உடனடியாக போலீசார் ஆறு தனிப்படைகளை அமைத்து சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர், சிறுவன் மஞ்சுக்கொள்ளை பகுதியில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
சிறுவனை விட்டுவிட்டு, மர்ம கும்பல் தப்பியோடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது போலீசார் குற்றவாளிகளை கைது செய்வதற்கான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.








