Home தமிழகம் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா !

மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா !

சென்னை தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித்துறை திட்டங்கள் மற்றும் சட்டப்பேரவை அறிவிப்புகள் குறித்து துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்.

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் பள்ளி கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக சட்டப்பேரவை அறிவிப்புகளில் பள்ளி கல்வித்துறை சார்ந்து அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் எத்தெந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கிறது அந்த திட்டங்களின் நிலை என்ன அந்த திட்டங்களின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கிறது .

அதாவது மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா அந்த திட்டங்கள் மூலமாக பள்ளி கல்வித்துறையில் இருக்கக்கூடிய ஆசிரியர்களுக்கான பணிச்சுமை வந்திருக்கிறதா இது போன்ற பல்வேறு கருத்துக்களை பள்ளி கல்வித்துறை அதிகாரிடம் கேட்டறிந்திருக்கிறார்.

மேலும் இதுவரை செயல்படுத்தப்படாத திட்டங்கள் என்ன இனி வரும் காலங்களில் அந்த திட்டங்களை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்தும் பள்ளி கல்வித்துறை அதிகாரிடம் கேட்டறிய இருக்கிறார்

மாநிலத்திற்கான கல்வி கொள்கையை வெளியிட்டதன் பிறகே அந்த கல்வி கொள்கையை இம்ப்ளிமென்ட் செய்வது அதாவது செயல்படுத்துவது தொடர்பாகவும் அவர்களிடம் கருத்து கேட்டு இருப்பதாகவும் அவர் அந்த தொடக்க வரையிலே பேசியிருந்தார்.

மாநில கல்வி கொள்கை வெளியிட்டதன் பிறகு பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல் ஆலோசனை கூட்டம் என்பதன் காரணமாக அதற்கு குழு அமைக்கப்படும் என்று சொல்லப்பட்டிருந்தது. இந்த பள்ளி கல்வி கொள்கை உருவாக்கிய பிறகு ஒரு குழு அமைக்கப்படும்.

அதன் பிறகே பள்ளி கல்வித்துறை கரிக்குலம் பாடத்திட்டம் உருவாக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.