ஆயுத பூஜையை ஒட்டி சென்னை கோயம்பேட்டில் பூஜை பொருட்கள் விற்பனை சூடுபிடித்திருக்கிறது தமிழகம் முழுவதும் சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை இன்று காலை முதலே கலைக்கட்டி வருகிறது. அந்த வகையில் இந்த பூஜைக்கு தேவையான பொருட்களின் விற்பனை என்பது சென்னை கோயம்பேட்டையில் இருக்கக்கூடிய மொத்த பூ மார்க்கெட்டில் கலைக்கட்டி வருகிறது
மிக முக்கியமாக பூஜைக்கு தேவையான அந்த பூக்களின் விலையை பொறுத்தளவு நேற்றைய விலையை தொடர்வதாக வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள். சாமந்தி கிலோ 200க்கும் ரோஜா 250 முதல் 300க்கும் மல்லிப்பூ கிலோ 1000 முதல் 1300 வரை சம்மங்கி 150 வரையிலும் விற்பனை ஆகிறது. இதை தவிர முல்லை 800 முதல் 1000 வரையும் தாமரை ஒரு பூ 10 முதல் 15 -க்குவிற்பனை ஆகிறது.
அதே நேரத்தில் பூஜைக்கு தேவையாக இருக்கக்கூடிய அந்த மாவிலை தோரணம் உள்ளிட்ட பொருட்களின் விலை என்பதும் தற்பொழுது கணிசமாக உயர்ந்திருப்பதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மிக முக்கியமாக ஒரே இடத்தில் இந்த பூஜைக்கு தேவையான மாவிலை, தோரணம், பூக்கள், அவல், பொறி, கடலை உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களும் கிடைப்பதால் சென்னை மட்டுமல்ல அண்டை மாவட்டங்களாக இருக்கக்கூடிய செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்லிருந்து வியாபாரிகளும் சரி பொதுமக்களும் இங்கு அதிகமாக வாங்கி செல்கின்றனர்
கடந்த மூன்று நாட்களாக ஒரே விதமான விலை என்பது நிர்ணயம் செய்யப்பட்டு அதனுடைய விற்பனை என்பது நடைபெற்று வருவதாக தெரிவிக்கிறார்கள். ஒரே இடத்தில் அதிகமான பொருட்களினுடைய அந்த விற்பனை என்பது நடைபெற்று வருகிறது. இன்று மாலை வரை இந்த விற்பனை என்பது கலைக்கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.








