நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் மதுரை மாட்டு தாவணையில் விதவிதமான தோற்றங்களில் விநாயகர் சிலைகளை தயார் செய்து விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.
நாளை மறுநாள் விநாயகர்சதுர்த்தியை கொண்டாடக்கூடிய நிலையில் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் பல்வேறு தோற்றங்களில் மூன்ற அடி முதல் 15 அடி வரையிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு தயார் நிலையில் வைத்திருக்கிறார்கள்.
மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகே ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட சிலை தயாரிப்பு தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக தங்களது குடும்பத்துடன் வசித்து வரக்கூடிய நிலையில் இங்கு இரண்டு அடி முதல் 15 அடி வரையிலான விநாயகர் சிலைகள் அதாவது ஜல்லிக்கட்டு காலை மீது அமர்ந்த விநாயகர், கம்ப்யூட்டர் இயக்கும் விநாயகர், மியூசிக் வாசிக்கக்கூடிய விநாயகர், பார்வதி மடியில் அமர்ந்திருக்கக்கூடிய விநாயகர், சிம்ம வாகனத்தில் இருக்கக்கூடிய விநாயகர் , அன்ன வாகனம் என பல்வேறு வடிவங்களிலும் பாகுபலி விநாயகர் என பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகள் இங்கு தயாரித்து விற்பனைக்கு தயார் நிலையில் வைத்திருக்கிறார்கள்.
பல்வேறு வண்ணங்களில் விநாயகர் சிலைகள் மிக பிரம்மாண்டமாக அனைவரையும் கவரும் விதமாகவும் தயாரித்து அனைவரையும் கவரக்கூடிய வகையிலேயே அவர்கள் தோட்டத்திற்கு வெளியே வைத்திருக்கிறார்கள்.
இந்த ஆண்டு விநாயகர் சக்தியை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிற நிலையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதிக்கப்பட்ட தடைகளையும் மீறி இவர்கள் விநாயகர் சிலைகள் அதாவது ஓராண்டாக உழைத்து விற்பனைக்கு தயார் நிலையில் வைத்திருக்கிறார்கள்.
வடமாநிலத்திலிருந்து பல ஆண்டுகளாக குடும்பம் குடும்பமாக இங்கு தங்கியிருந்து விநாயகர் சிலைகளை தயாரித்து விற்பனைக்கு வைத்திருக்கக்கூடிய நிலையில் விநாயகர் சிலைகள் அனைத்தும் விற்பனையானால் தங்களுக்கு மகிழ்ச்சி.








