கடலூரில் மீன் வலையில் 7 அடி நீள மலைப்பாம்பு சிக்கி பரபரப்பு
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள ஒரு ஏரியில் மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், வலையை இழுத்துக் கொண்டிருந்தபோது அதில் சுமார் 7 அடி நீளமுடைய மலைப்பாம்பு சிக்கி இருந்தது.
இதைக் கண்ட மீனவர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், மலைப்பாம்பை எச்சரிக்கையுடன் பிடித்து பாதுகாப்பாக வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.








