Home தமிழகம் ” அதிசயம் ” செப்டம்பர் ஏழாம் தேதியில்:

” அதிசயம் ” செப்டம்பர் ஏழாம் தேதியில்:

செப்டம்பர் ஏழாம் தேதி ராத்திரி மறக்காம எல்லாரும் வானத்தை பாருங்க. ஏன்னா ஒரு பெரிய அதிசயம் நடக்க போகுது.

நம்மளோட வெள்ளையா சொலிக்கிற நிலா திடீர்னு ரத்த சிவப்பா மாறப்போகுது. ஐயோ இது ஏதோ கெட்டதுக்கு அறிகுறியான்னு பயப்படாதீங்க.

இது ஒரு சூப்பரான வானியல் நிகழ்வு. இதுக்கு பெயர் பிளட் மூன் அப்படி இல்லன்னா முழு சந்திர கிரகணம்.

இந்த மேஜிக் எப்படி நடக்குது? இதை நாம எப்போ எங்க இருந்து பார்க்கலாம்? வாங்க சிம்பிளா சூப்பரா தெரிஞ்சுக்கோம்.

நிலாவுக்கு ஏன் இந்த கலர் மாறுது? சூரியனுக்கும் நிலவுக்கும் நடுவுல நம்ம பூமி ஒரே லைன்ல வந்து நிக்குது.

அதனால பூமியோட நிழல் நிலா மேல முழுசா விழுந்துடும். அப்போ சூரியனோட வெளிச்சம் நேரடியா நிலா மேல படாது.

ஆனா இங்கதான் ஒரு சின்ன ட்விஸ்ட். சூரியனோட வெளிச்சம் பூமியை சுத்தி இருக்கிற காத்துல பட்டு லைட்டா வளைஞ்சு நிலா மேல விழும்.

சாயங்காலம் சூரியன் மறையும் போது, வானம் எப்படி ஆரஞ்சு சிவப்பு கலர்ல மாறுதோ, அதே மாதிரி இந்த வெளிச்சமும் நிலாவை இரத்த சிவப்பா மாத்தடும்.

அவ்வளவுதாங்க விஷயம். இதை நாம பார்க்க முடியுமான்னு கேட்டீங்கன்னா தாராளமா பார்க்கலாம்.

இந்த முழு சந்திர கிரகணும் நம்ம இந்தியாவுல ரொம்ப தெளிவா தெரியும். நாம அதிர்ஷ்டசாலிங்க. இதை பார்க்க சரியான நேரம் என்னன்னா செப்டம்பர் 7 ஞாயிற்றுக்கிழமை ராத்திரி ஒரு 9 மணி வாக்கள ஆரம்பிச்சு நள்ளிரவு தாண்டி 1.30 மணி வரைக்கும் இந்த அதிசயத்தை பார்க்கலாம்.

உங்க மொட்டை மாடியில இருந்தே பார்க்கலாம். டெலாஸ்கோப் எல்லாம் தேவையில்லை.