சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத்ததுறை தெரிவித்திருக்கிறது.
இந்திய முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை மற்றும் புறநகர் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது .
இந்நிலையில் காலை முதல் வானிநிலை மாற்றம் மழைநீர் தேக்கம் விட்டுவிட்டு கனமழை பெய்யும் சூழல் உள்ளிட்ட காரணங்களால் மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் வைரஸ் காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளதாக சுகாரதுறை தெரிவித்திருக்கிறது.
பொதுவாக காய்ச்சல் மழை நேரங்களில் பெரும்பாலும் வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் பரவ வாய்ப்பு இருக்கிறது எனவே காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனையை நாடவும்.
வயதானவர்கள் கர்ப்பிணிகள் குழந்தைகள் இணைநோய் உள்ளவர்கள் காய்ச்சல் அறிகுறி தெரிந்தால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லவும் என சுகாரத்ததுறை அறிவுத்திருக்கிறது.
மக்கள் நெருக்கம் அதிகமாக இருக்கும் இடங்களிலேயே வைரஸ் காய்ச்சல் தொற்று அதிகமாக பரவதால் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் தொற்று சற்று அதிகமாக இருப்பதாகவும் அறிகுறி இருந்தால் அலச்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறவும் என சுகாதாரத்துறை அறிவுறுத்துகளை வழங்கி இருக்கிறது.








