Home தமிழகம் “ஈரோட்டில் அதிர்ச்சி: அமெரிக்கா வரி பெயரில் போலி விற்பனை – பழைய ஆடைகள் கண்டு மக்கள்...

“ஈரோட்டில் அதிர்ச்சி: அமெரிக்கா வரி பெயரில் போலி விற்பனை – பழைய ஆடைகள் கண்டு மக்கள் ஆவேசம்!”

அமெரிக்காவின் அதீத வரிவிதிப்பால் ஏற்றுமதி செய்ய முடியாத ஆடைகள் மற்றும் காலணிகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக வந்த விளம்பரத்தை நம்பி ஈரோட்டில் ஏராளமான மக்கள் தனியார் ஹோட்டலில் குவிந்தனர்.

ஆனால் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆடைகள் அனைத்தும் பழையனதாகவும் சேதமடைந்தும் இருந்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஈரோட்டில் அமெரிக்காவின் வரிவிதிப்பை பயன்படுத்தி குறைந்த விலைக்கு முன்னணி நிறுவனங்களின் பொருட்கள் விற்பனை செய்வதாக போலியாக விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை ஏமாற்றியதால் வாடிக்கையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஈரோடு மாவட்டம் திண்டலில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் முன்னணி நிறுவனங்களின் ஆடைகள் உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக தினசரி நாழிதளில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

மேலும் முன்னணி பிராண்ட் ஆடைகள் ஷூக்கள் உள்ளிட்ட பொருட்கள் 200 மற்றும் ₹300க்கும் முன்னணி நிறுவனங்களில் 8000 மதிப்பிலான பொருட்கள் 500 முதல் ₹1490 வரைக்கும் விற்பனை செய்வதாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

இதனை நம்பி ஏராளமான வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்க அங்கு குவிந்தனர். ஆனால் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சேதமாகியும் பொருட்கள் பழைய பொருட்களாகவும் இருந்ததால் இதனை கண்டு வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதிர்ச்சி அடைந்து ஹோட்டல் நிர்வாகிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டு விற்பனை நிறுத்தப்பட்டு வாடிக்கையாளர்களை அந்த நிர்வாகத்தினர் வெளியேற்றினர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் அவர்கள் மீது இதுபோன்ற போலியாக விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் கேட்டுக்கொண்டனர்.