காஞ்சிபுரம் பத்மாவதி சர்க்கரை ஆலையை வி.கே சசிகலா 450 கோடிக்கு மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை கொடுத்து வாங்கியதாக FIR -ல் சிபிஐ குறிப்பிட்டுள்ளது.
இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. பத்மாவதி சுகர்ஸ் நிறுவனம் 120 கோடி ரூபாய் மோசடி செய்ததாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அளித்த புகாரில் பெங்களூர் சிபிஐ வழக்கு பதிவு செய்து கடந்த மாதம் சென்னை, திருச்சி தென்காசியில் சோதனை நடத்தியது.
சர்க்கரை ஆலை கடந்த 2017ஆம் ஆண்டில் கைமாறிய நிலையில் அது சசிகலாவின் பினாமி சொத்தாக கடந்த 2020 ஆம் ஆண்டில் வருமானவரித்துறை அறிக்கை அளித்ததால் சிபிஐ வழக்கு பதிவு செய்து இந்த சோதனையை நடத்தியது.
ஐஓபி வங்கியிலிருந்து மோசடியாக கடன் பெற்றது. சொத்துக்களை முறைக்கேடாக பயன்படுத்தியது. தனிப்பட்ட நிறுவனங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கியது மற்றும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது சந்தேகத்திற்குரிய வகையில் ரொக்கத்தை வங்கிகளில் செலுத்தியதும் FIR-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.








