Home தமிழகம் “பால் வாங்க சென்ற மாணவிக்கு ரயில் விபத்து – மக்கள் அதிர்ச்சி, கோபம்!”

“பால் வாங்க சென்ற மாணவிக்கு ரயில் விபத்து – மக்கள் அதிர்ச்சி, கோபம்!”

மதுரை–போடி லைன் பகுதியில், பால் வாங்குவதற்காக ரயில்வே தண்டவாளத்தைக் கடந்துச் செல்ல முயன்ற கல்லூரி மாணவியின் கை மீது ரயில் உரசியதால், கை துண்டாகும் அளவிற்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளை ஒட்டிய தண்டவாளங்களில் பாதுகாப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

“மதுரையில், பால் வாங்க ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற கல்லூரி மாணவியை, தேனியில் இருந்து வந்த ரயில் சிறிதளவு உரசிச் சென்றதால் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மாணவி கை துண்டாகும் அளவு கடுமையாக காயம் அடைந்த நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தண்டவாளத்தை ஒட்டிய பகுதிகளில் பாதுகாப்பு வேலிகள் அவசியம் என மக்கள் கோரிக்கையும் அதிகரித்துள்ளது.”

மதுரை ரயில்வே நிலையத்திலிருந்து தேனி மாவட்டம் போடி நோக்கி செல்லும் ரயில் தினமும் இயங்கி வருகிறது. இன்று காலை 8.20 மணியளவில், மதுரை–பலவட்டம்–போடி லைன் பகுதியில், மதுரையைச் சேர்ந்த சோயா என்ற கல்லூரி மாணவி தண்டவாளம் அருகே நடந்து சென்றார். அப்போது, தண்டவாளத்தைத் தழுவி நடந்து சென்ற மாணவியின் அருகே வந்த தேனி ரயில், அவரின் கையைத் திடீரென உரசிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில், மாணவியின் கை முழுவதும் நசுங்கிய நிலையில், உடனடியாக பொதுமக்கள் தகவல் அளிக்க, 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினசரி ரயில் போக்குவரத்து நடைபெறும் இந்த பகுதியில், மக்கள் தொடர்ந்து அலட்சியமாக தண்டவாளத்தை கடப்பதால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதனால், குடியிருப்பு பகுதிகளை ஒட்டிய தண்டவாளப் பகுதிகளில் பாதுகாப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்களிடம் இருந்து வலுத்து வருகிறது.