இந்திய அளவில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41% பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுருக்கக்கூடிய அறிக்கையில் இந்திய அளவில் தொழிற்சாலைகளை பணிபுரியக்கூடிய பெண்களுடைய சதவீதம் என்பதில் தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் 41.4% பெண்கள் வேலை செய்கிறார்கள் .
தொழிற்சாலைகள் என்ற அந்த புள்ளி விவரமானது வெளியிடப்பட்டிருக்கிறது. இது இந்த அரசின் வெற்றியாக முதலமைச்சர் அவர்கள் பதிவிட்டுருக்கிறார்.
குறிப்பாக திராவிட மாடல் ஆட்சியில் அந்த விடியல் பயணம் கலைஞர் மக்கள் உரிமை திட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்டம் என பல்வேறு திட்டங்கள் பெண்களை மையப்படுத்தி அவர்கள் பயன்பெறும் வகையில் பொருளாதார ரீதியாக உயரும் வகையில் அந்த திட்டங்களானது செயல்படுத்தப்பட்டு வருகிறது
எனவே இதுபோன்ற திட்டங்கள் காரணமாக தமிழகத்தில் தொழிற்சாலைகளில் பயன் பெறக்கூடியவர்கள் பணியாளர்களாக இருக்கக்கூடியவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது .
அந்த வகையில் 41.4% பெண்கள் வந்து தொழிற்சாலையே பணிபுரிவதாக முதலவர்கள் அந்த அறிக்கை வாயிலாக குறிப்பிட்டு இருக்கிறார். இதுமட்டுமில்லாமல் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதையும் முதலமைச்சர் அவர்கள் விளக்கி இருக்கிறார்.








