நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் ஆர்ப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட அன்னை சத்யா நகர் குடியிருப்பு பகுதியில், தமிழக அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு குடிசை மாற்று அடுக்குமாடி குடியிருப்புகளில் 912 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன,
இதில் விசைத்தறி தொழிலாளர்கள் ஏழை எளிய பாமர மக்கள் என பல்வேறு தரப்பினர் வசித்து வருகின்றனர். அதில் 650 க்கும் மேற்பட்ட வீடுகளில் தற்போது வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு 13 ஆண்டுகளே ஆன நிலையில் குடியிருப்பு பகுதியில் பல்வேறு இடங்களில் விரிசல் விழுந்தும், கை வைத்து தட்டினாலே சிமெண்ட் உதிரி கற்கள் விழும் நிலையில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிகையில் கடந்த 2012 ஆம் ஆண்டு இந்த குடியிருப்புகள் கட்டப்பட்டு திறப்பு விழா செய்யப்பட்டது.அப்போது இருந்து இப்போது வரை எண்ணற்ற தொழிலாளர்கள் இந்த வீட்டில் வசித்து வருகின்றனர் கட்டிடத்தை கட்டிக் கொடுத்த கட்டிட ஒப்பந்ததாரர்கள் அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு விழா செய்யப்பட்டபோது நாங்கள் பார்த்ததோடு சரி, அதன் பிறகு அவர்கள் ஒரு முறை கூட வரவில்லை. தொடர்ச்சியாக பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ளவில்லை .இதன் காரணமாக கட்டிடம் கட்டப்பட்ட 13 ஆண்டுகளிலே தற்போது கட்டிடத்தின் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்ட நிலையில் காணப்படுகிறது.
குறிப்பாக கட்டிடத்தின் இரும்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ள தூண் பகுதியில் நான்கு முனைப்பகுதியிலுமே அதிக அளவு கட்டிடத்தில் இருந்து அவ்வப்போது சிமெண்ட் கற்கள், செங்கல் உதிரி கற்கள் கீழே விழுகிறது. தமிழக அரசும், குடிசை மாற்று வாரிய அதிகாரிகளும் உடனடியாக வந்து இந்த பகுதியில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கட்டடங்களின் தன்மை அது உறுதியாக உள்ளதா !?என்பது குறித்தும் முறையான ஆய்வு செய்து புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டி கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் செய்தித்தாள்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக வந்தது போல ,செம்பரபாக்கம், மேடவாக்கம் உள்ளிட்ட இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் இடிந்து கீழே விழுவதை போன்ற நிலை இங்கு ஏற்படும் முன்பாக உடனடியாக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர் .








