Home தமிழகம் பொய்யான அறிக்கை !

பொய்யான அறிக்கை !

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்து ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை போலியானது என அதிமுக தெரிவித்திருக்கிறது.

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருக்கக்கூடிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன்தினம் இரவு அணைக்கட்டு தொகுதியிலே தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த பொழுது ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று அந்த பகுதி வழியாக வந்தது.

அதாவது அவருடைய தேர்தல் பரப்புரை பகுதி வழியாக ஆம்புலன்ஸ் வாகனம் வந்திருந்தது. அதனை சுட்டிக்காட்டியிருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ளக்கூடிய அனைத்து இடங்களிலும் இதுபோன்று பரப்புரையின் இடையே அந்த பரப்புரையில் குறிக்கீடு செய்யக்கூடிய நோக்கத்தோடு நோயாளிகளே இல்லாமல் வெறுமனவே ஆம்புலன்ஸை அனுப்பி கொண்டே இருக்கின்றார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்

அதை கண்டிக்கக்கூடிய வகையிலே தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் என்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டதாக நேற்றைய தினம் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

அந்த நிறுவனத்தின் அழைப்பினுடைய பெயரிலே அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. அதிமுக பொதுச் செயலாளர் எங்களை அவமதிக்கும் வகையில் பேசியிருக்கின்றார்.

ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மீது திட்டமிட்டு பொய்யான தகவலை சொல்லி இருக்கின்றார் என்று ஆனால் அந்த அமைப்பு பெயரில் வெளியாகி இருந்த அறிக்கையில் உண்மை இல்லை என்று அதிமுக தரப்பில் தற்போது அவருடைய ஆடியோவுடன் வெளியிடப்பட்டிருக்கின்றது.

அதன்படி தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஒட்டுனர்கள் மற்றும் உரிமையாளர் சங்கத்தை சார்ந்த அந்த அமைப்பின் நிறுவனர் என்னுடைய
ஆடியோ என்று குறிப்பிட்டு பொய்யான தகவல் பரப்பப்படுகின்றது.

நான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை.

எங்களுடைய அமைப்பு பெயரில் வெளியாகி இருந்த அந்த அறிக்கை உண்மையற்றது என்று குறிப்பிடக்கூடிய ஆடியோவை வெளியிட்டு அதிமுக சார்பில் இது போன்று பொய்யான தகவலை அதாவது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆம்புலன்ஸ் உரிமையாளர் சங்கம் வெளியிட்டதாக சொல்லப்பட்ட அறிக்கை பொய்யானது என்று குறிப்பிட்டுள்ளனர்.