Home தமிழகம் “ரயில் பாதை சீரமைப்பு: 7 நாட்களுக்கு ரயில் சேவைகள் மாற்றம், மக்கள் அவதி!”

“ரயில் பாதை சீரமைப்பு: 7 நாட்களுக்கு ரயில் சேவைகள் மாற்றம், மக்கள் அவதி!”

தூத்துக்குடி–வாஞ்சி மணியாற்றி இடையே ரயில் பாதை சீரமைப்புப் பணிகள் நடக்கின்றதால், ஏழு நாட்களுக்கு ரயில் சேவைகள் மாற்றப்பட்டுள்ளன.

தூத்துக்குடி–நெல்லை இடையே இயக்கப்படும் பெஸஞ்சர் ரயில்கள் இன்று முதல் 23 ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.

தூத்துக்குடி–வாஞ்சி மணியாற்றி இடையே நடக்கும் ரயில் சேவைகளில் மாற்றங்கள் கீழ்க்காணும் வகையில் உள்ளன:

  • எழும்பூர் முதல் செல்லும் முத்துநகர் ரயில் 20, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் வாஞ்சி மணியாற்றி வரை மட்டுமே இயங்கும்.
  • 21, 22, 23 ஆகிய தேதிகளில் முத்துநகர் ரயில் மணியாற்றியில் இருந்து இரவு 9:10 மணிக்கு சென்னை புறப்படும்.
  • மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் 20, 21, 22 ஆகிய தேதிகளில் வாஞ்சி மணியாற்றி வரை இயங்கும். 21, 22, 23 ஆகிய தேதிகளில் மணியாற்றி ரயில் நிலையத்திலிருந்து மாலை 6 மணிக்கு புறப்படும்.
  • சென்னையிலிருந்து தூத்துக்குடி வரும் முத்துநகர் ரயில் மணியாற்று ரயில் நிலையத்தில் காலை 5 மணிக்கு வந்தடையும்.

இந்த மாற்றங்களால் 20, 21, 22, 23 ஆகிய தேதிகளில் முத்துநகர் மற்றும் மைசூர் ரயில்களில் பயணிகள் தூத்துக்குடிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் தங்கள் பயண நேரங்களை மாற்றி திட்டமிட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், ரயில் சேவைக்கு பதிலாக பேருந்து போக்குவரத்து வசதி செய்யப்பட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் ரயில்வே நிர்வாகத்துடன் இணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.