Home தமிழகம் ரயிலில் தனியாக அழுது கிடந்த 9 மாத குழந்தை… அடுத்தது நடந்தது என்ன?

ரயிலில் தனியாக அழுது கிடந்த 9 மாத குழந்தை… அடுத்தது நடந்தது என்ன?

சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து ஒன்பது மாத குழந்தையை ரயில்வே போலீசார் மீட்டனர். சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்7 பெட்டியில் இருந்த ஒன்பது மாத பெண் குழந்தையை ரயில்வே பாதுகாப்பு போலீசார் மீட்டனர்.

ரயிலின் அனைத்து பெட்டிகளிலும் குழந்தையின் பெற்றோர் உள்ளார்களா என்று தீவிரமாக தேடப்பட்டபோதிலும், குழந்தையின் பெற்றோர் அடையாளம் காணப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து மீட்கப்பட்ட குழந்தைக்கு உடனடியாக தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, பாதுகாப்பான பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பின்னர் குழந்தை உதவி மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. கைவிடப்பட்ட இந்த குழந்தையின் பெற்றோர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.