சென்னை மெரினா உழைப்பாளர் சிலை அருகே ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்து வருகின்றனர்.
சாலை மறையல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சிலர் சாலையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக கைது செய்து வருகின்றனர்.
சென்னை மெரினா உழைப்பாளர் சிலை அருகே ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் மண்டலம் ஏழில் உள்ள ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அவர்கள் 20 நாட்களுக்கு மேலாக மாநகராட்சி அலுவலகத்தின் முன் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பெயரில் போலீசார் வந்து அவர்களை கைது செய்தனர்.
இதை தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் அவர்களின் போராட்டம் பல வடிவங்களில் நடைபெற்றது. இன்று காலை, கலைஞர் நினைவிடம் அருகே போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதற்கிடையே, போலீசார் குவிந்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் திடீரென காமராஜர் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் காலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அகற்ற போலீசார் முயற்சி செய்தனர் ; சிலரை கைது செய்ய உடன்படாததால், வலுக்கட்டாயமாக போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக மாநகர பேருந்துகளில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
ஒரு பகுதியில் 20 பேரை கைது செய்த நிலையில், சாலையில் மறுப்புறத்தில் இருந்து மேலும் 20–30 பேர் வந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மாநகராட்சியில் ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றும் அவர்கள் பணி நிரந்தரமாக மாற்றப்பட வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாகவே போலீசாருக்கு அவர்கள் போராட்டத்தில் வருவதாக தெரிந்திருந்தது; இருப்பினும், அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.








