Home தமிழகம் “தமிழக வாக்காளர்கள் கவனத்திற்கு: SIR படிவம் குறித்து முக்கிய அறிவிப்பு!”

“தமிழக வாக்காளர்கள் கவனத்திற்கு: SIR படிவம் குறித்து முக்கிய அறிவிப்பு!”

தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் SIR (Special Intensive Revision) எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியில், படிவத்தில் உள்ள மூன்று பாக்ஸ்களையும் நிரப்புவது குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. இதில், உறவினர்களின் விவரங்கள் — தந்தையின் பெயர், தாயார் பெயர், மனைவி/கணவன் பெயர் ஆகியவற்றை கட்டாயம் நிரப்ப வேண்டுமா என்ற சந்தேகங்களுக்கு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெளிவான விளக்கமளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

SIR படிவத்தில் உள்ள மூன்று பாக்ஸ்களில், ஒரு பாக்ஸில் மட்டும் உங்கள் பெயர், முகவரி மற்றும் வாக்காளர் எண் சரியாக இருந்தால் போதும்.

உறவினர்கள் பற்றிய முழு விவரங்களைத் தெரியவில்லை என்றால் கவலைப்படத் தேவையில்லை.

தெரிந்த விவரங்களை மட்டும் பூர்த்திசெய்து கொடுத்தாலே பரவாயில்லை.

உறவினர் பெயரை நிரப்புவது கட்டாயம் அல்ல.

இந்த விவரங்களைப் பூர்த்தி செய்யாததால் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது.

யாரும் அச்சமோ குழப்பமோ அடைய வேண்டாம்.

தமிழகத்தில் உள்ள 6 கோடியே 41 லட்சம் வாக்காளர்களில், 6 கோடியே 24 லட்சம் வாக்காளர்களுக்கு SIR படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் இதுவரை 4 கோடியே 53 லட்சம் படிவங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

மேலும், பூத் லெவல் அதிகாரிகள் (BLO) இதுவரை 70.70 லட்சம் SIR விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பித்துள்ளதாகவும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

உறவினர்கள் பற்றிய விவரங்களை வழங்க இயலாதவர்கள், அந்த இடத்தில் N.A. (Not Applicable) என்று குறிப்பிடலாம். அதனால் வாக்காளர் பெயர் நீக்கப்படாது; தேவையான சந்தேகங்கள் இருந்தால் மட்டுமே தேர்தல் அலுவலகம் விசாரிக்கும்.

அதனால், SIR படிவத்தில் உங்களுக்குத் தெரிந்த விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து, அதை விரைவில் BLO மூலம் அல்லது இணையம் மூலம் ஒப்படைக்கலாம்.

இதற்காக பொதுமக்கள் குழப்பமின்றி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டுமென தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தியுள்ளார்.