Home தமிழகம் தமிழகத்தில் அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு.. விடுமுறை எத்தனை நாள் தெரியுமா?

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு.. விடுமுறை எத்தனை நாள் தெரியுமா?

பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் மாதத்தில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான அரையாண்டுத் தேர்வுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வுகள் நடைபெறுகின்றன. 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 4ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆறாம் முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணையின் படி:

  • டிசம்பர் 15 – தமிழ்
  • டிசம்பர் 16 – ஆங்கிலம்
  • டிசம்பர் 17 – விருப்ப மொழி
  • டிசம்பர் 18 – கணிதம்
  • டிசம்பர் 19 – உடற்கல்வி
  • டிசம்பர் 22 – அறிவியல்
  • டிசம்பர் 23 – சமூக அறிவியல்

பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு அட்டவணை:

  • டிசம்பர் 10 – தமிழ்
  • டிசம்பர் 12 – ஆங்கிலம்
  • டிசம்பர் 15 – கணிதம்
  • டிசம்பர் 18 – அறிவியல்
  • டிசம்பர் 22 – சமூக அறிவியல்
  • டிசம்பர் 23 – விருப்ப மொழி

11ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை:

  • டிசம்பர் 10 – தமிழ்
  • டிசம்பர் 12 – ஆங்கிலம்
  • டிசம்பர் 15 – இயற்பியல்/பொருளாதாரம்
  • டிசம்பர் 17 – கணிதம்/விலங்கியல்/வர்த்தகம்
  • டிசம்பர் 19 – வேதியியல்/கணக்கு பதிவியல்
  • டிசம்பர் 22 – கணினி அறிவியல்
  • டிசம்பர் 23 – உயிரியல்/வரலாறு/தாவரவியல்

12ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை:

  • டிசம்பர் 10 – தமிழ்
  • டிசம்பர் 12 – ஆங்கிலம்
  • டிசம்பர் 15 – கணிதம்/விலங்கியல்/வணிகவியல்/நுண்ணுயிரியல்/விவசாய அறிவியல்
  • டிசம்பர் 17 – வேதியியல்/கணக்கு பதிவியல்/புவியியல்
  • டிசம்பர் 19 – இயற்பியல்/பொருளாதாரம்
  • டிசம்பர் 22 – உயிரியல்/தாவரவியல்/வரலாறு
  • டிசம்பர் 23 – கணினி அறிவியல்