Home தமிழகம் “தெருநாய்கள் வழக்கால் உலகம் முழுவதும் பிரபலமான நீதிபதி விக்ரம்நாத் – ‘தெருநாய்களுக்கும் தலைமை நீதிபதிக்கும் நன்றி’”

“தெருநாய்கள் வழக்கால் உலகம் முழுவதும் பிரபலமான நீதிபதி விக்ரம்நாத் – ‘தெருநாய்களுக்கும் தலைமை நீதிபதிக்கும் நன்றி’”

சர்வதேச சமூக அங்கீகாரம் கிடைக்க உதவிய தெருநாய்களுக்கும் வழக்கை ஒதுக்கிய தலைமை நீதிபதிகளுக்கும் நன்றி உள்ளவனாக இருப்பேன் என்று உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம்நாத் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தேசிய சட்டசேவை ஆணைய நிகழ்ச்சியில் பேசியவர் நீண்ட காலமாக சிறிய வட்டாரத்திற்குள்ளாகவே அறியப்பட்டிருந்தேன்.

ஆனால் தெருநாய்கள் விவகாரம் உலகெங்கிலும் உள்ள முழு சிவில் சமூகத்திலும் தனக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று கூறினார்.

தெருநாய்கள் குறித்த வழக்கு தன்னை உலகம் முழுவதும் பிரபலமாக்கி விட்டது என்று கூறிய நீதிபதி விக்ரம்நாத் சர்வதேச சமூக அங்கீகாரம் கிடைக்க உதவிய தெருநாய்களுக்கும் இந்த வழக்கை தனக்கு ஒதுக்கிய தலைமை நீதிபதி வி.ஆர் கவாய்க்கும் நன்றி உள்ளவராக இருக்கிறேன் என்றார்.

2027ஆம் ஆண்டில் தலைமை நீதிபதிக்கான வரிசையில் இடம்பெறும் விக்ரம்நாத் தெருநாய்கள் தொடர்பான வழக்கில் ஆகஸ்ட் 11 ஆம் தேதியில் வெளியான உத்தரவை மாற்றி அமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.