Home தமிழகம் “இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான TET தேர்வு தேதி அறிவிப்பு”

“இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான TET தேர்வு தேதி அறிவிப்பு”

TET தேர்வு இதுவரை 3lலட்சத்து 80ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் விண்ணப்பித்துள்ளனர். ஆன்லைனில் விண்ணப்பித்திற்கான காலக்கெடு இன்று மாலை 5.00 மணியுடன் நிறைவடைகிறது.

மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதன்படி இடைநிலை ஆசிரியர்கள் TET தாள் ஒன்று தேர்விலும் , பிஎட் முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் TET தாள் இரண்டு தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.

அந்த வகையில் 2025ஆம் ஆண்டுக்கான TET தேர்வு நவம்பர் 15 மற்றும் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இணையவழி விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 11ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி எட்டாம் தேதி முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்பதாரர்களின் வேண்டுகோளை ஏற்று தேர்வு இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதியை ஆசிரியர் தேர்வாரியம் இன்றுவரை நீடித்தது.

அதன்படி TET தேர்வுக்கான காலக்கெடு இன்று மாலை 5.00 மணியுடன் முடிவடைகிறது. இந்த தேர்வுக்கு இரு தாள்களையும் சேர்த்து 3 லட்சத்து 80ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர்