Home தமிழகம் எஸ்.ஐ-யை சிறைப்பிடித்தனர்.

எஸ்.ஐ-யை சிறைப்பிடித்தனர்.

சேலம் சூரமங்கலத்தில் உளவு பார்க்க சென்ற காவல்துறை உளவு பிரிவு உதவி ஆய்வாளரை தலைமா இந்தியா லிமிடட் என்ற தனியார் நிறுவன பெண் ஊழியர்கள் முற்றுகையிட்டு அறையில் சிறைப்பிடித்தனர்.

நிறுவனம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டதால் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் உளவு பிரிவு எஸ்.ஐ ராஜசேகரன் சாதாரண உடையில் சென்று தகவல் சேகரித்துள்ளார்.

அப்போது தங்களது பிரச்சனையை ஏன் அரசுக்கு தெரிவிக்கவில்லை என கூறி அவரை சிறைபிடித்த நிலையில் இன்ஸ்பெக்டர் வந்து மீட்டுச் சென்றார்.