Home தமிழகம் “தொடர் விடுமுறையில் பக்தி பெருக்கு – பழனி மலை நிரம்பிய மக்கள் கூட்டம்”

“தொடர் விடுமுறையில் பக்தி பெருக்கு – பழனி மலை நிரம்பிய மக்கள் கூட்டம்”

சந்திர கிரகணத்தை ஒட்டி பழனிமலை முருகன் கோவில் பிற்பகலில் நடை சாத்தப்படுவதால் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

சுமார் மூன்று மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பழனி கோவிலில் சந்திர தினத்தை முன்னிட்டு இன்று மாலை கோவில் நடை அடைக்கப்பட உள்ளதால் காலை முதல் பக்தர்கள் மூன்று மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அறுப்படை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி கண்டாயுதபாணி சாமி கோவிலில் வெள்ளிகிழமை மிலாடி நபி விடுமுறை சனி ஞாயிறு மற்றும் ஓணம் பண்டிகை கேரள பக்தர் வருகை என தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. நிலுவை நிலையில் ரோப்கார் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து கொண்டிருக்கின்றனர்

அதேபோல குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக மலைக்கோவிலுக்கு பக்தர்கள் செல்லவும் கீழே இறங்கி வர படிப்பாதை வழியாக வரும் வகையிலும் ஒருவழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் மலைக்கோயிலில் இலவச தரிசனம் சிறப்பு கட்டண தரிசனம் என மூன்று மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்

இன்று மாலை சந்திர கிரகணத்தை முன்னிட்டு மலைக்கோயில் செல்ல மாலை ஏழு மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது அதனை தொடர்ந்து 7:45 மணிக்கு இரவுக்கால பூஜையுடன் 8:30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது.

மீண்டும் மறுநாள் காலை கோவில் நடை திறக்கப்படும் என்பதால் இன்று காலை முதல் பக்தர் வசதியை அதிகரித்துள்ளது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் இணையாணையர் மாரிமுத்து தலைமையில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மேலும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக டிஎஸ்பி தனஞ்சயன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.