Home தமிழகம் சொந்த ஊர்களுக்கு போற பயணம்… Flightல போறதா? Busல போறதா? தெரியல!

சொந்த ஊர்களுக்கு போற பயணம்… Flightல போறதா? Busல போறதா? தெரியல!

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாடுவதற்கு பெரும்பாலான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்ந்திருக்கிறது.

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை நாட்கள் முகூர்த்த நாட்கள் என்று தென்தமிழகத்திற்கும் மேற்கு மாவட்டங்களுக்கும் ஏராளமான பயணிகள் சென்னையிலிருந்து புறப்பட்டு செல்கின்றார்கள்.

அரசு பேருந்துகள் நிரம்பி விட்ட நிலையில் தனியார் பேருந்துகளில் செல்வதற்கு பலரும் ஆர்வம் காட்டி வரக்கூடிய நிலையில் சென்னை கிளாம்பாக்கம் உட்பட தனியார் ஆம்னி பேருந்துகள் புறப்படக்கூடிய அனைத்து இடங்களில் இருந்தும் ஆம்னி பேருந்துகளுக்காக காத்திருக்கக்கூடியவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக இன்று காலை முதலே உயர்ந்திருக்கின்றது.

இந்த நிலையில் தான் பயணிகளுடைய எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து ஆம்னி பேருந்துகள் சாதாரண நாட்களில் வசூலிக்கக்கூடிய கட்டணத்தை காட்டிலும் கிட்டத்தட்ட மூன்று மடங்கிற்கு மேலாக கூடுதலாக கட்டணத்தை வசூலித்து வருகின்றனர்.

அதன்படி திருச்சிராப்பள்ளிக்கு எல்லாம் வழக்கமாக இது போன்ற நாட்களிலே 600 ரூபாய் வசூலிக்கப்படும் ஆனால் தற்பொழுது திருச்சிராப்பள்ளிக்கு ₹1000 ரூபாய்க்கும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.

இதே போன்று மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கும் திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களுக்கும் கூட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. அதன்படி மதுரைக்கு 1000 ரூபாய்க்கு உள்ளாகவே கட்டணம் வழக்கமாக வசூலிக்கப்படும் நிலையில் 2500 ரூபாய்க்கும் கூடுதலாக தற்பொழுது கட்டணமும் திருநெல்வேலிக்கு வழக்கமாக 1300 1500 ரூபாய்க்குள்ளாக வசூலிக்கப்படும் நிலையில் தற்பொழுது 3000 ரூபாய் வரையும் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.

அதேபோன்று நாகர்கோவில் உள்ளிட்ட நகரங்களுக்கு கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களுக்கு ஏறக்குறைய 3500 ரூபாய் அளவு கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.

இன்று பிற்பகலிலேயே கட்டணம் இந்த அளவு உயர்ந்திருக்கக்கூடிய சூழ்நிலையில் நாளை நாளை மறுநாள் இன்று அடுத்தடுத்த நாட்களில் இந்த கட்டண உயர்வு மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் போக்குவரத்த துறையில் இருக்கக்கூடிய அதிகாரிகள் கட்டண உயர்வு தொடர்பாக கட்டணம் வசூலிக்கப்பது குறித்து ஆங்காங்கு பேருந்துகளை நிறுத்தி சோதனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையினை ஆம்னி பேருந்துகளில் பயணிக்க கூடியவர்கள் முன்வைத்துள்ளனர்.