Home தமிழகம் “வீரமங்கையின் வீரத்தை நினைவூட்டும் புதிய சிலை”

“வீரமங்கையின் வீரத்தை நினைவூட்டும் புதிய சிலை”

சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் தமிழக அரசு சார்பில் 50 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக நிறுவப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார் சிலையை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சிவகங்கை சீமையினுடைய மன்னரான ராணி வேலுநாச்சியாருடைய புகழை போற்றக்கூடிய விதமாக தலைநகரான சென்னையிலே புதிய சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை கடந்த ஆண்டு மானிய கோரிக்கையின் போது தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டிருந்தார்.

அதன்படி 50 லட்சம் ரூபாய் மதிப்பிட்டில் ராணி வேலுநாச்சியார் அவர்களுக்கு முழு உருவ சிலை சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றது .

ஏற்கனவே நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட பலருடைய நினைவிடங்கள் மற்றும் சிலைகள் அந்த காந்தி மண்டபத்திற்குள் இருக்கக்கூடிய நிலையில் புதிய சிலையாக ராணி வேலுநாச்சியார் அவர்களுடைய சிலை நிறுவப்பட்டிருக்கின்றது.

அந்த சிலையை ஒட்டி அவருடைய வரலாறும் பொறிக்கப்பட்டிருக்கின்றது. இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக ஆங்கிலேயரை எதிர்த்து கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்கு பிறகு இழந்த மண்ணை மீட்டெடுத்த வீராங்கனையாக பார்க்கப்படக்கூடியவர் ராணி வேலுநாச்சியார்.

முதல் இந்திய பெண் விடுதலை போராட்ட வீராங்கனை என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டவர்.ராணி வேலுநாச்சியார் அவர்களுடைய சிலையானது தலைநகரமான சென்னையில் திறக்கப்பட்டிருக்கின்றது.

அவருடைய புகழை போற்றக்கூடிய விதமாக இந்த சிலை கிண்டி காந்திமண்டப வளாகத்தில் 50 லட்சம் ரூபாய் செலவீட்டிலே ,செய்தி மக்கள் தொடர்பு துறை உள்ளிட்டவர்கள் மூலமாக அமைக்கப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் தற்போது திறந்து வைத்திருக்கின்றார். அமைச்சர்கள் பலரும் இதில் பங்கேற்றுள்ளனர்.