இசையால் நம் நெஞ்சங்களை ஆளும் இளையராஜா அவர்களுக்கு எத்தனையோ புகழ் மகுடங்கள் பாராட்டு மாலைகள் பத்மபூஷன் பத்ம விபூஷன் போன்ற பட்டங்கள் இருந்தாலும் அவருக்கென அவருடைய ஆற்றலுக்கென பொருந்தி அவருடைய என்றைக்கும் பயணிக்கிற பட்டம்தான் முத்தமிழ அறிஞர் கலைஞர் அவர்களால் வழங்கிய இசைஞானி பட்டம்.
அது பட்டமா இல்ல பெயராவே நிலைத்து விட்டது இசைஞானி அவர்களின் உயரங்களை பார்த்து பெருமைப்பட்ட தலைவர் கலைஞர் அவர்கள் இசைஞானி அவர்களுக்கு வழங்கின மரியாதை யாரும் யாருக்கும் தராத மரியாதை
வரலாற்றில் எத்தனையோ மாமனிதர்கள் ஒரே பிறந்த நாளை கொண்டாடக்கூடியவங்களாக இருப்பாங்க. ஆனால் யாரும் இன்னொருத்தருக்காக தன்னுடைய பிறந்த நாளை மாத்தி கொண்டது கிடையாது.
ஆனால் இசைஞானி அவர்கள் தலைவர் கலைஞருக்காக தன்னுடைய பிறந்த நாளை ஜூன் இரண்டாம் நாளாக மாற்றிக்கொண்டார் . அந்த வகையில் உள்ளத்திலேயும் ராஜாவாக உயர்ந்து நிற்கிறார் இசைஞானி அவர்கள்.
தமிழாலும் இசையாலும் உயர்ந்து கலைஞருக்கும் இசைஞானிக்கும் இருந்த நட்பு தனிப்பட்ட முறையில் என்னால் மறக்க முடியாத நிகழ்வானது என்னுடைய மகள் செந்தாமரை நாட்டிய அரங்கேற்றத்தில் இளையராஜா அவர்கள் பங்கேற்று வாழ்த்தினார்.
அந்த நட்போடு அவர் லண்டனில சிம்பொனி அரங்கேற்றம் பண்ண போறார் என்ற செய்தி வந்த உடனே அவருடைய வீட்டுக்கு முதல் ஆளா சென்று என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தேன்.
ராஜா அவர்களும் சிம்பொனி சாதனையை நிறைவேற்ற வெற்றி கழிப்போடு என் வீட்டுக்கு வந்து என்னை பார்த்தார் இந்த அன்புக்கு நான் என்றைக்கும் கட்டுப்பட்டவன், கடமைப்பட்டவன் அந்த அன்போடு சொல்கிறேன்
இது இசைஞானி இளையராஜாவிற்காக நடத்தக்கூடிய பாராட்டு விழா மட்டுமல்ல உங்களுக்கு நாங்க எல்லோரும் நன்றி தெரிவிக்கக்கூடிய விழா இப்படிப்பட்ட விழாவை இந்த சிறப்பான விழாவில ஒரு அறிவிப்பை வெளியிடாமல் நான் இருக்க முடியுமா?
இசைத்துறையில் ஆர்வத்தோடு சிறந்த இசையை படைக்கிற இசை கலைஞர்களை ஊக்குவிக்கிற விதமா தமிழ்நாடு அரசின் சார்பில் இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பேரில் விருது வழங்கப்படும் என்று மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்.
அறிவிப்பு மட்டுமல்ல ஒரு கோரிக்கையும் முன்வைக்கிறேன் நமது இளையராஜாவின் சாதனைகளுக்கு எந்த மகுடம் சூட்டினாலும் அது சாதாரணம்தான் அப்படிப்பட்ட மேதைக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரதரத்தினா விருது வழங்கப்பட வேண்டும் என்ற ஆவலை இந்த மேடையில் அனைவரின் சார்பிலும், தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, உலகெங்கும் இருக்கக்கூடிய ராஜாவினுடைய ரசிகர்கள் சார்பிலும் இந்த விழாவிலே நான் தெரிவிக்க விரும்புகிறேன் இது நிச்சயம் நிறைவேறும் என்று நான் நம்புகிறேன்.








