Home தமிழகம் “ZOOவில் சிங்கம் மாயம்! ஊழியர்கள் பரபரப்பு… கடைசியில் நடந்தது ‘பெரிய ட்விஸ்ட்’!”

“ZOOவில் சிங்கம் மாயம்! ஊழியர்கள் பரபரப்பு… கடைசியில் நடந்தது ‘பெரிய ட்விஸ்ட்’!”

சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் லயன் சஃபாரி பகுதியில் விடப்பட்ட ஷெரின் என்ற புதிய சிங்கம் காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பூங்கா பணியாளர்கள் தெரிவித்தனர்.

ஏற்கனவே பூங்காவில் உள்ள இரு சிங்கங்களுடன் பழகுவதற்காக விடப்பட்ட சிங்கம் உணவுக்காக திரும்பி வராததால் அதை தேடும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

அப்போது லயன் சஃபாரி பகுதியில் உள்ள புதர் பகுதியில் சிங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.